Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் கடிதம்!  

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார். 

சீனாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது வரை 29 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மத்திய அரசு அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. 

அதில் மாணவர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கடந்த 28 நாட்களில் மாணவர்களோ பள்ளி ஊழியர்களோ கொரோனா பாதித்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். 

காய்ச்சல், இருமல், சளி, மூச்சுதிணறல் ஆகியவை இருந்தால் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோருக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்ய கழிப்பறைகளில் எப்போதும் சோப், தண்ணீர் இருப்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார். அதில்  கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். கொரோனாவை தடுக்க, முக கவசங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  

 

Categories

Tech |