தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் பேசிய, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்,
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் என்றும், இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்த அவர், அதற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர பேரவையில் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் மாநிலங்களுக்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்