அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு அம்சமான மாநிலம் தமிழகம் என்று தமிழக முதல்வர் பெருமிதம் தெரிவித்துக் கொண்டார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பின்னர் அங்கு இருந்த செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் அனைத்து அம்சங்களும் கூடிய ஒரு மாநிலம். முழுமையான மின்சார வசதி உள்ளது. சட்ட ஒழுங்கு சிறப்பான முறையில் பேணிக் காக்கப்படுகிறது. படித்த இளைஞர்கள் அதிக பேர் இருக்கின்றனர். 1774 கிலோ மீட்டர் கடற்கரை சாலை உள்ளது. அங்கே பல துறைமுகங்கள் இருக்கின்றன. அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு அம்சமான மாநிலம் தமிழகம். அதனால தமிழகத்துக்கு தொழில் தொடங்குவதற்கு அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள் அந்த ஆர்வத்தை பயன்படுத்தி அதிக அளவில் தொழிற்சாலை தொடங்க வேண்டுமென்பது எங்களுடைய எண்ணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.