செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உலக அளவில் இருந்த சதுரங்க போட்டியை நடத்துவதற்கு மிக முக்கிய காரணமாக நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தாரோ, அது போல இன்னும் பல்வேறு போட்டிகளையும் வருங்காலத்தில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளையும் அவர் நிச்சயமாக முன்னின்று நடத்தி, தமிழகத்திலே அவர் சொன்னது அதான்.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் விளையாட்டில் முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்கின்றதை நிறைவேற்றுவேன் என்று சொல்லி இருக்கின்றார். அதை நிறைவேற்றுவார்.. கண்டிப்பாக அதுதான் சொல்லியிருக்கிறார்கள்.. தொகுதிகளில் ஸ்டேடியம் வரும்பொழுது.. அதே மாதிரி பள்ளிகளாக இருந்தாலும். கல்லூரியாக இருந்தாலும்… விளையாட்டு ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவர் செய்வார் என்று நம்புகிறோம்.
நான் முதலில் சொன்னேன்… ஸ்கில் தேவலப்மன்ட் என்று ஸ்கில் ஸ்டேட்மென்ட் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதற்காக 60 கோடி ரூபாய் அரசாங்கமே கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறமைகளை வளர்ப்பதற்கு, துறைகளை வளர்ப்பதற்கு முதலமைச்சர் ஒதுக்கி இருக்கின்றார்.
அந்த அடிப்படையில் வருகின்ற காலங்களில் பொறியியல் கல்லூரிகள்அனைத்தும் வளர்ச்சி பெறும். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளும் வளர்ச்சி பெறும்.தொழிற்சாலைகளோடு தொடர்பு கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் அதற்கான துறைகளில் பயிற்சிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.