பிரதமர் மோடியின் உதவியால் நான்கு வருடமாக திருவாரூர் மாவட்ட சிறுமி கல்வி பயின்று வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு ரக்ஷிதா என்ற ஒரு மகள் இருக்கிறார். 2016 – ம் ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்க ஆசைப்பட்டு ரக்ஷிதா விண்ணப்பித்துள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகம் ரக்ஷிதாவின் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. இதனால் சிறுமி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தைப் படித்த பிரதமர் மோடி உடனே பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து சிறுமியை பள்ளியில் சேர்க்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.
அதனை ஏற்று பள்ளியில் சேர்த்துக் கொண்ட நிர்வாகம் அதன் பின் கல்விக் கட்டணம் கட்டவில்லை என வெளியில் நிற்க வைத்தது. உடனே மீண்டும் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார் ரக்ஷிதா. அன்றைய நாளில் இருந்து தற்போது வரை 4 வருடகாலமாக பிரதமர் மோடி அச்சிறுமிக்கு கட்டண தொகையை கொடுத்து படிக்க வைத்து வருகிறார். இதுகுறித்து ரக்ஷிதா கூறுகையில், “நான் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். என்னைப் போன்ற ஏழை, எளிய மாணவர்களும் படிக்கப் பிரதமர் உதவி புரியவேண்டும்” இவ்வாறு அவர் எனது ஆசையை தெரிவித்துள்ளார்.