தமிழக மக்கள் அனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க கோரி ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை வழக்கை விசாரித்த நீதிபதி, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கபசுர குடிநீரைத் தினமும் 60 மிலி குடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை சித்த மருத்துவமனைகளிலும், நாட்டு மருந்தகங்களிலும் கபசுர குடிநீரை வாங்குவதற்கு மக்கள் அலைமோதி வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்பதால் கபசுர குடிநீர் எப்போதும் உடலுக்கு நன்மையை தரும் என்றே சொல்லலாம்.
ஆனால் பரவிவரும் கொரோனா வைரசுக்கு கபசுரகுடிநீரை மருந்தாக பரிந்துரைக்கவில்லை என சித்தமருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 309 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக மக்கள் அனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க கோரி உத்தரவிட கோரி வழங்க தொடரப்பட்ட நிலையில் அரசுக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.