மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் இதனை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது கொரோனா காலத்தில் மிக முக்கிய வழக்குகள் மட்டுமே காணொலி மூலம் நடைபெற்று வருகிறது இந்த வழக்கு பட்டியலிட்டு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது