நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கும் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் பொது தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி இயக்குனர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.