சென்னையில் குறுகலான தெருக்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர், மக்கள் தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு ட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், நோய் அறிகுறி உள்ளவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,
இருக்கும் இடத்திற்கே வந்து நடமாடும் வாகனங்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே சென்னை மக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது என்றும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்றும் முதல்வர் அறிவித்துளளார்.