Categories
சென்னை மாநில செய்திகள்

சிஏஏ தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு முக்கிய ஆலோசனை!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசு சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து விதமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் பதில் அளிக்க உள்ளதாகவும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் தலைமை செயலாளர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான ஆலோசனையில் டிஜிபி, காவல் ஆணையர், ஹஜ் கமிட்டியின் அபுபக்கர், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாற்றங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

Categories

Tech |