உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து, இன்றைக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக இருக்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கூறினார்.
விழுப்புரம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அம்மா இருக்கின்ற போதும் சரி… அம்மாவின் மறைவிற்குப் பிறகும் சரி சிறப்பான நடவடிக்கை எடுத்த காரணத்தினாலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து. இன்றைக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக இருக்கின்றோம். அதேபோல இன்றைக்கு இந்த மாவட்டத்திலேயே ஏராளமான திட்டங்களை கொடுத்திருக்கிறோம். கூட்டு குடிநீர் திட்டம், கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் நானே இங்கே வந்து மரியாதைக்குரிய சகோதரர் சி.வி. சண்முகம் அவர்கள் இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.
அவருடைய கோரிக்கையை ஏற்று அம்மாவின் அரசு சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமான திட்டத்தை கொடுத்தோம். இன்றைக்கு பாதுகாக்கப்பட்ட நீர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அதையும் நாங்கள் தான் அறிமுகப்படுத்தியுள்ளோம். ஏரி பாழடைந்த நிலையில் இருந்தது விழுப்புரத்தில் அதை சீர் செய்ய வேண்டும் என்று என்னை அழைத்து வந்து பூமி பூஜை போட்டார். பூமி பூஜை போட்டு பிறகு அந்த ஏரியில் இருக்கின்ற மண்ணை எல்லாம் அள்ளி, குப்பை எல்லாம் அள்ளிவிட்டு பிரம்மாண்டமாக அதை விழுப்புரத்தில் செய்து கொடுத்தார். இதையெல்லாம் யாராலும் மறக்க முடியாது காலத்தால் அழிக்கமுடியாத திட்டம் அந்த திட்டம்.
அதேபோல விழுப்புரம் நகராட்சிக்கு சிறப்பு திட்டமாக 50 கோடி ரூபாய் கொடுத்தோம். இன்னும் சொல்லப்போனால் விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட அந்த நெல்லையெல்லாம் மூட்டை பிடித்து நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டுபோய் அதை திறந்த வெளியில் 15 நாள் அடிக்கி வைத்து அந்த விவசாயி கொண்டுவந்து நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பல இடங்களில் கொள்முதல் செய்யாத காரணத்தினால் அந்த நெல்மணிகள் எல்லாம் மழை பெய்து மலையிலே முளைத்து பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார்கள், நான் தொடர்ந்து வலியுறுத்தினேன் அறிக்கை வெளியிட்டேன் ஆனால் அமைச்சர்கள் எல்லாம் சரியான பதில் கிடைக்கவில்லை.
எங்கேயோ விவசாயிகள் கொண்டுவந்த நெல்லை நெல் கொள்முதல் நிலையத்திலேயே கொள்முதல் செய்ய மறுக்கவில்லை என்று தவறான செய்தியை பத்திரிக்கைகளில் ஊடகத்திலே வெளியிட்டிருந்தார்கள். உண்மை உங்களுக்கு தெரியும் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், கடலூர் மாவட்டத்தில் விவசாய உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கப்படதா காரணத்தினாலே அவர் கொண்டுவந்த நெல் எல்லாம் திறந்த வெளியிலே அடுக்க வைத்த காரணத்தினால் அந்த நெல்மணிகள் எல்லாம் முளைத்து வேதனையோடு நம்முடைய தொலைக்காட்சிகளில் எல்லாம் பேட்டியளித்தனர்.
விவசாயிகள் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள், மக்களுக்கு உணவளிக்கின்ற விவசாயிகள், இரத்தத்தை வேர்வையாக மண்ணில் சிந்தி உழைக்கும் விவசாயிகள், பொதுமக்கள் உற்பத்தி செய்யப்பட்ட அந்த நெல்மணிகள் எல்லாம் கொள்முதல் செய்யாத காரணத்தாலேயே பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் மூட்டை வீணாகிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலட்சியத்தால் விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு லட்சம் மூட்டைகள் இன்றைக்கு மழையிலே நனைந்து முளைத்து பெரும் நஷ்டம் அடைந்து இருகின்றார்கள்.