சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு..
அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அதில் 2 ஆயிரம் பேருந்துங்கள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்துத்துறைக்கு ரூ.623 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
2021-22ம் ஆண்டில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,738.81 கோடியும்,
பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5,000 கோடியும்
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களுக்கு ரூ.688 கோடியும்
மீன்வளத்துறைக்கு ரூ.580.97 கோடியும்
தீயணைப்புத் துறைக்கு ரூ.436.68 கோடியும்
உயர் கல்வித்துறைக்கு ரூ. 5, 478 கோடியும்
மின் துறைக்கு ரூ.7,217 கோடியும்
காவல்துறைக்கு ரூ.9,567.93 கோடியும்
கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ.1224.26 கோடியும்
சுகாதாரத்துறைக்கு ரூ.19,420.54 கோடியும் நீதித்துறைக்கு ரூ.1,437 கோடியும்
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.