செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆ. ராஜா அவர்களின் விளக்கம் என்பது சூத்திரர்களை பார்த்து சொல்கின்ற கருத்து, நான்கு வர்ணங்களில் நாலாவது வர்ணமாக இருக்கின்ற, கீழ் சாதி என்று சொல்லப்படுகின்ற தலித் அல்லாத, பழங்குடியினர் அல்லாத, பிராமணர் அல்லாத, சத்திரியர் அல்லாத, வைத்தியர் அல்லாத, பிறவினரை, உழைக்கும் பாட்டாளிகளை பார்த்து மனுதர்மம் உன்னை இப்படி சொல்கிறது. இதை ஏற்றுக் கொள்கிறாயா? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
ஆனால் இவர்கள் ஒட்டுமொத்தமாக ஏதோ இந்துக்களின் பாதுகாவலர்கள் இவர்கள் தான் போன்ற ஒரு தோற்றத்தை, பெரும் மாயையை உருவாக்கி பார்க்கின்றார்கள். இவர்களை வட இந்தியர்கள் வேண்டுமானால் புரிந்து கொள்ள சிக்கல் இருக்கலாம்.தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இந்த கும்பலின் சதியை, இவர்கள் சித்து விளையாட்டை, சூழ்ச்சியை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறோம். இவர்கள் ஜம்பம் தமிழ்நாட்டில் பலிக்காது. இவர்களின் அவதூறு முயற்சிகள் எடுபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய ஒன்றிய அரசு தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதே இல்லை, எக்கேடுகெட்டாலும் நமக்கு கவலை இல்லை என்கின்ற அலட்சியப் போக்கில் செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. உடனடியாக இந்திய ஒன்றிய அரசு தலையிட வேண்டும். கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் விடுவிப்பதற்கும், அவர்களது உடைமைகளை திரும்ப தருவதற்கும் ஆவணச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழக முதல்வர் அவர்களும் இதுகுறித்து இந்திய ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.