தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2ஆம் நிலையில் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 100 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். 90, 4 12 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார். நாம் இரண்டாம் நிலையில் தான் இருக்கின்றோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அனைவரின் உடல்நிலை சீராக உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்புக்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.