Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி – அரசின் புதிய அதிரடி உத்தரவு ….!!

நாடு முழுவதும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், கடுமையான சட்டங்களையும் பிறப்பித்து வருகிறது. அண்மையில் கூட உத்தரப்பிரதேசத்தில் நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் இந்தியாவை உலுக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் இதற்கு எதிரான புதிய திட்டம் ஒன்றை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக நிதி வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூபாய் 4 லட்சம் – ரூபாய் 7 லட்சம், கடுமையான பாலியல் தாக்குதலுக்கு ரூபாய் 5 லட்சம் – ரூபாய் 10 லட்சம், மனரீதியாக காயமடைந்தவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் – இரண்டு லட்சம்,  பாலியல் வன்முறையால் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் –  10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

Categories

Tech |