அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத தேவையாக இருந்தது வருவது வெங்காயம். வெங்காயம் விலை ஏற்றம் பொதுமக்களை கண்ணீர் வடிக்க வைக்கிறது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக வெங்காயத்தை பத்துக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பண்டிகை காலங்கள் அடுத்தடுத்து வருவதால் மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயத்தை வழங்க அரசு பல்வேறு கட்ட துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
வெங்காயம் விலை உயர்ந்து வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா சிறு பல்பொருள் அங்காடிகள், கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மற்றும் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்த விலைக்கு பெரிய வெங்காயத்தை பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.