Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவிலே ரொம்ப, ரொம்ப செஞ்சது தமிழகத்துக்கு தான் – காலரை தூக்கி விடும் தமிழக பாஜக …!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் 1 கோடி மாஸ்க் பொதுமக்களுக்கு கொடுத்துள்ளோம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் எங்களுடைய வெற்றிவேல் யாத்திரை காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த யாத்திரை ஆறுபடை வீடுகளுக்கு சென்று, தமிழகம் முழுவதும் செல்ல இருக்கிறது. நிறைவாக டிசம்பர் 6ஆம் தேதியன்று ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில்  நிறைவு பெறுகிறது.

ஒரு மாதம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசிய நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், முக்கியமான மாநிலத்தின் முதலமைச்சர்கள் என அத்தனை பேரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நிறைவு நிகழ்ச்சிகளில் தேசிய தலைவர் நட்டா அவர்கள்  வாறேன் என்று சொல்லி இருக்காங்க. இந்திய யாத்திரையின் நோக்கம் இந்தியாவிலேயே அதிக அளவில் மத்திய அரசாங்கத்தின் உடைய திட்டங்களை பலனடைந்தவர்கள் நம்முடைய தமிழ்நாட்டில் தான் இருக்காங்க. அதிக அளவு திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு அதனை மக்களுக்கு கொண்டு சேர்ப்போம்.

முதல்முறையாக பிரதமருக்கு எல்.முருகன் எழுதிய அதிரடி கடிதம்..!! மீண்டும்  வேகம் எடுத்த தமிழக பாஜக..!! | tamilnadu bjp state president l murugan wrote  letter to prime minister modi

குறிப்பாக சொல்லப்போனால் கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு கோடி மகளிர் அக்கவுண்ட்ல மாதம் 500 ரூபாய் வீதம் நாம கொடுத்திருக்கிறோம். அதேபோல தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட 41 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கத்தின் திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 6000 ரூபாய்  அக்கவுண்ட்ல சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசாங்கத்தினுடைய நேரடி பயனாளிகள்… இலவச கேஸாக இருக்கலாம், இப்படி நேரடியாக பயனாளிகள் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் பயனாளிகள் இருக்கிறார்கள்.

இன்னும் எங்களுடைய திட்டங்களை மக்கள் மத்தியில் அதிகமாக சென்றடையும் நோக்கில் கொரோனா விழிப்புணர்வு நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கின்றோம். நிவாரண உதவிகள் செய்து கொண்டிருந்தோம. இந்த யாத்திரையில் கொரோனாவில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கு  n95 முகக் கவசங்கள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், டாக்டர்கள், காவலர்கள், மீடியா சகோதரர்கள் என அனைவருக்கும் இந்த யாத்திரையின்போது நாங்க கொடுக்க இருக்கிறோம். ஏற்கனவே தமிழ்நாடு  முழுவதும் ஒரு கோடிக்கு பொதுமக்களுக்கு கொடுத்து இருக்கிறோம்.

Categories

Tech |