தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 283 பேர் குணமடைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல மாநில அரசாங்கங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமிருக்கிறது.
இந்தியாவில் முதல் முதலில் கொரோனா கண்டறியப்பட்டதே கேரள மாநிலத்தில் தான். அந்த மாநிலத்தில் இருந்து சீனாவில் சென்று படித்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் குணமடைந்த பிறகு தான் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் கொரோனா வேகமாக பரவியது. கேரளாவில் கொரோனா தொடங்கும் போதே அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது. அம்மாநில முதல்வர் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண திட்டங்களை அறிவித்தார்.
பின்னர் அனைத்து பகுதிகளிலும் வேகமேத்து கொரோனா கேரளாவை ஆட்டி படைத்தது. இந்தியாவிலே அதிகம் பாத்தித்த மாநிலமாக இருந்த கேரளம் படிப்படியாக கொரோனவை கட்டுப்படுத்தி சிறந்து விளங்கியது. கேரளா மாநிலம் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குவதாக பிறரும் புகழ்ந்து தள்ளிய வரிசையில் தற்போது தமிழகமும் இணைந்துள்ளது. குறிப்பாக கேரளாவை விஞ்சும் அளவிற்கு தமிழகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதித்த 103 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. அதுவே கேரளாவில் 255 பேர் குணமடைந்துள்ளனர். அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 300 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனவை சிறப்பாக கையாண்டு வருவதிலும், மக்களுக்கு சிகிச்சை வழங்கி வருவதிலும் கேரளாவை விட தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இதற்கு தமிழகம் எடுத்த முன்மாதிரியான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகள் அடங்கும் என்பதால் பலரும் தமிழக அரசை பாராட்டி வருகின்றனர்.