Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அமைச்சர் மிகவும் கவலைக்கிடம் – பெரும் அதிர்ச்சி…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அமைச்சர் காமராஜு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி கொரோனா காரணமாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காமராஜுக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

Categories

Tech |