தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை, இரண்டு அமைச்சர்களை பற்றி நான் பேசாம போய் விட்டேன் என்றால் தவறாக போய்விடும். இரண்டு பேருமே முத்தான அமைச்சர்கள், மண்ணின் மைந்தர்கள், தூத்துக்குடியின் உடைய செல்லப்பிள்ளை என்று அவர்கள் இரண்டு பேருமே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நம் அனிதா ராதாகிருஷ்ணன், ஊழல் செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.
நானே மேடைக்கு வரும்போது கேட்பேன்… திமுகவில் இருக்கிறாரா? அதிமுகவில் இருக்கிறாரா? என்று அப்பப்போ மறந்துவிடுவார். ஏனென்றால் கொள்கை பிடிப்பு இல்லாதவர்களிடம் பேசுவது மிகவும் கடினம், இப்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு புதுப்பேர் என்னவென்றால் ED அனிதா ராதாகிருஷ்ணன் ஏனென்றால், ED கூப்பிட்டு, ED சம்மன் பண்ணி… அவர் எதோ போர்ட் வாங்கிருக்கிறார், அதெல்லாம் கண்டுபிடித்து சார்ஜ் சீட் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார்கள், எப்போது உள்ளே போவார் என்று தெரியாது.
எப்போதும் வேண்டுமானாலும் போகலாம். அவர்கள் இந்த தொகுதியில் ஒரு அமைச்சராக இருக்கிறார். தன் மீது இருக்கக்கூடிய ஊழல் புகாரை அதிகாரிகள் விசாரிக்கிறார்கள் என்றால், அங்கே போய் பதில் சொல்லிவிட்டு மிச்சம் கொஞ்சம் நேரம் எடுத்தால் தூத்துக்குடிக்குள் எட்டிப் பார்க்கிறார்.
மீன்வளத்துறை அமைச்சர். ஆனால் கடல் தண்ணி காலில் படக்கூடாது நான்கு பேர் தூக்கி கொண்டு போக வேண்டும். ஐயோ எங்கள் தலைவருடைய கால் சமுத்திரம் தண்ணீர் பட்டுவிட்டது என்று… இவர்கள் எல்லாம் நமக்கு அமைச்சர்களாக… மண்ணின் மைந்தர்களாக… மக்களுக்கு நல்லது செய்வோம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.