Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 போட்டி: ஜூன் 4 ம் தேதி முதல் தொடங்குகிறது …!!!

5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20போட்டியானது ,வருகின்ற ஜூன் மாதம் 4 தேதி முதல் நடைபெற இருக்கிறது .

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ,தமிழ்நாடு பிரிமீயர் லீக் 5வது டி20 போட்டி வருகின்ற ஜூன் 4ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது திண்டுக்கல் ,சேலம் ,நெல்லை, கோவை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, இந்த போட்டிகள்  நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் தொடக்க ஆட்டமானது  நெல்லையிலும், இறுதிப் போட்டியானது சேலத்திலும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கு பெறுகின்றன. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது .

Categories

Tech |