கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோவை, நீலகிரி,ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் வானம் தெளிவாக காணப்படும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதனிடையே தருமபுரியில் பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, மாரண்டஹெள்ளி உள்ளிட பகுதிகளில் கனமழை பெரிது வருகிறது. சேலத்தில் கோரிமேடு, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி , மத்தூர், சந்தூர், அகரம், புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.