Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காவிரி ஆணையத்தில் தமிழகம் கோரிக்கை….!! 

டெல்லியில் நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு காவிரி நீர் தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளது. 

கர்நாடகா மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும், காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி., அளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் பங்கீட்டு அளவை  உறுதிப்படுத்துவதற்கு மற்றும்  தண்ணீரின் அளவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இரு மாநில பிரதிநிதிகளுடன்  ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

இந்நிலையில்  மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே டெல்லியில் மசூத் ஹூசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது. இதில் தமிழக மற்றும் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகள் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், மேகதாது அணைத்திட்டம் குறித்து வழக்கு உள்ளதால் ஆணைய கூட்டத்த்தில் விவாதிக்க கூடாது. குருவை சாகுபடிக்கு ஏதுவாக கர்நாடகாவில் இருந்து ஜூன் மாதத்தில் 9.2 டிஎம்சி நீர் திறக்கப்பட வேண்டும். மே மாதம் முடிவதற்குள் காவிரியில் 2 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க உத்தரவிட வேண்டும் என  கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

Categories

Tech |