தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 10ம் வகுப்புக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகத்தை இணையத்தில் வெளியிட தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அந்தவகையில் முதற்கட்டமாக 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும், அதன் தொடர்ச்சியாக மற்ற வகுப்புகளுக்கும் இணையத்தில் இ-புத்தகம் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த தகவல் எஸ்எம்எஸ் மூலம் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.