Categories
மாநில செய்திகள்

“தமிழகம் சென்சிட்டிவ்” – தேர்தல் ஆணையம் அதிரடி….!!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அறிவிகின்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல்கள் முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகின்றோம். தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்.

கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேர்தல் நடத்துகின்றோம். 5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். பீகார் தேர்தலில் பல பாடங்களை தேர்தல் ஆணையம் கற்றுக்கொண்டது. பீகார் மாநில தேர்தல் அதிகாரிகளை இந்த தருணத்தில் மனதார பாராட்டுகிறேன். தமிழகம் சென்சிட்டிவ் என்பதால் தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேரை நியமித்துள்ளோம்.

Categories

Tech |