பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா ஜனவரி 27,. இன்று விடுதலையாக உள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா உடல்நிலை மோசமான காரணத்தினால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா தற்போது உடல்நலம் தேறி விட்டதாக மருத்துவமனை சார்பில் கூறியுள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலை சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா விடுதலை தொடர்பான ஆவணங்களில் சசிகலாவிடம் கையொப்பம் பெற்று விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து சசிகலா அவரது உறவினர்களின் கட்டுப்பாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் செல்வார்.