Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக டூல்ஸ் இவருதான்..! பாஜக சும்மா விடாது… ரஜினிக்கு அச்சுறுத்தல்… தமிழக அரசியலில் பரபரப்பு தகவல்..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், யாரும் யாரையும் சந்திக்கலாம். சந்திக்க கூடாது அப்படின்னு நாம எதுவும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. ரஜினிகாந்த் வந்து அரசியல ஈடுபடமாட்டேங்கிறத உறுதிப்பட தெரிவித்து விட்டார் ஏற்கனவே. ஆனா ரஜினிகாந்த் ஏதோ ஒரு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறாரோ என்கிற ஒரு யூகம் இருக்கிறது. அவர வந்து பிஜேபி சும்மா விடுவதாக தெரியவில்லை.

ஆர்எஸ்எஸ்காரர்கள் அவரை சும்மா விடமாட்டார்கள் என்பது தெரிய வருகிறது. அவரை பயன்படுத்தி அவர ஒரு டூலா பயன்படுத்தி, தமிழ்நாட்டு அரசியலுக்குள்ள ஏதோ ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆர்.என் ரவி அவர்கள் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். அவர் ஏற்கனவே இந்த மாதிரி நடந்ததால் நாகலாந்திலே பொது மக்களால் எதிர்ப்பு தெரிவிக்க கூடிய அளவுக்கு, கண்டிக்க கூடிய அளவுக்கு செயல்பட்டவர். அவருக்கு எதிராக போராட்டம் நடந்தது.

இன்னைக்கு தமிழகத்தில் அவருடைய அரசியல் அவருடைய நடவடிக்கைகள் என்பது மைய மாநில அரசுகளுக்கு இடையிலான ஒரு பாலமாக இருந்து செயல்படாமல் ஆர்எஸ்எஸ்காரர்களின் கடமையை செய்யக்கூடியவராக, ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாகராகவே அவர் செயல்படுகிறார் ஆர்என் ரவி என்பதை விட ஆர்எஸ்எஸ் ரவி என்று சொல்லலாம். என்கிற அளவுக்கு அவருடைய அணுகுமுறைகள் இருக்கின்றன. கவர்னர் பங்களா என்பது, ஆர்எஸ்எஸ் பங்களாவாக இருக்கிறது.

கவர்னர் பதவி என்பது ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் என்கிற பதவியாக இருக்கிறது. இதுதான் கவலை அளிக்கிறது. அவர் தமிழ்நாட்டுக்குள்ளே மத அடிப்படையிலான ஒரு பிரிவினைவாத அரசியலை வலுப்படுத்துவதற்குரிய அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். அந்த வேலையிலே ரஜினி போன்றவர்கள் பகடை காய்களாக ஆக்கப்படுவார்களோ என்று நாங்கள் ஐயப்படுகிறோம் என விமர்சித்தார்.

Categories

Tech |