தமிழகம் முழுவதும் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றோடு நிறைவடைந்தது. இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடதை தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக அரசு இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை அறிவித்தது. இன்று முதல் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை திருமணம், இறுதிச் சடங்குக்கான முந்தைய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேர் வரை கலந்து கொள்ளலாம், இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.