Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டிச-15ம் தேதி திறப்பு – அதிரடி அறிவிப்பு…!!

டிச -15ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மதுபான பார்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டது. ஆனால் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படுவதற்கு மட்டும் அனுமதி இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 3,250 டாஸ்மாக் பார்களை டிசம்பர் 15ஆம் தேதி முதல் திறக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒன்பது மாதங்களாக பார் கட்டடங்களுக்கு வாடகை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருவதால், அரசு தலையிட்டு இழப்பை சரி செய்ய வேண்டும் என பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |