Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கேரளாவுக்கு உற்ற துணையாக தமிழகம் இருக்கும் – தமிழக முதல்வர்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலே கொரோனா முதலில் பாதித்த மாநிலமாக கேரளா. அதை தொடர்ந்து அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் கேரளா , மகாராஷ்டிரா என மாறி இருந்த நிலையில் தமிழகம் அதிக பாதிப்பு பெற்ற மாநிலங்களின் வரிசையில் இரண்டாம்  இடம் பிடிதத்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரளா மூட போகின்றது என்ற செய்தி வெளியகியது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், இது ஒரு வதந்தி கேரளா அப்படி ஒருபோதும் நினைத்ததில்லை. அவர்கள் நம்முடைய அண்டை மாநிலத்தவர் மட்டுமல்ல, அவர்களை நம் சகோதரர்கள் ஆகவே பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள மாநிலம் தமிழக மக்களை சகோதர சகோதரியாகவே அன்புடன் பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவும், சகோதரத்துவமும் என்றும் மலரட்டும் என்ற கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் டிவிட்டர் முலம் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |