Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தின் NO.1 நடிகர் ‌CM ஸ்டாலின் தான்”…. பாஜகவை வச்சு தான் திமுக வண்டியே இப்ப ஓடுது…. BJP அண்ணாமலை பளீர்…!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அமைச்சர்களுக்கு தற்போது உதயநிதியை புகழ்வது மட்டும் தான் ஒரே வேலை. பாஜக-திமுக கூட்டணி அமையப்போவதாக சி.வி சண்முகம் கூறியுள்ள நிலையில், அவர் பாஜகவில் இணைந்து விட்டாரா என்று நான் கேள்வி எழுப்புகிறேன். கூட்டணி பற்றி கட்சியில் இருப்பவர்கள் மட்டும்தான் சொல்ல வேண்டும். சினிமா துறையைப் பொறுத்தவரை உதயநிதி மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டும் பிழைத்தால் போதுமா?. மற்றவர்கள் வாழ வேண்டாமா?

தங்களுடைய அதிகாரத்தை வைத்து இன்னும் எத்தனை நாட்களுக்கும் மிரட்டி சினிமா துறையில் தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்திருக்க முடியும் என்பதை நாங்களும் பார்க்க தான் போகிறோம். அதன் பிறகு அதிமுக கட்சியில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் எப்போதும் தலையிட மாட்டோம். அதை தொண்டர்கள் பார்த்துக் கொள்வார்கள். முன்பெல்லாம் எங்கே பாஜக இருக்கிறது என்று கேட்ட திமுகவுக்கு தற்போது பாஜகவை வைத்து தான் வண்டியே  ஓடுகிறது. முரசொலியில் வரும் முக்கிய கட்டுரைகள் பாஜகவுக்கு எதிராக தான் இருக்கிறது.

நாங்கள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் செய்கிறோம். நாங்கள் கூட்டணி கட்சிகளை போன்று அமைதியாக வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. திமுக அரசுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் 9 ஊழல் புகார்களை கொடுத்துள்ளோம். ஒருவேளை லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம். ஆ. ராசாவுக்கு ஊழல் பற்றி பேச தகுதியே கிடையாது. நேர்மையான மனிதர் போல் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் நம்பர் ஒன் நடிகர் மு.க ஸ்டாலின் தான் என்று பேசினார். மேலும் திமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் அண்ணாமலை புகார் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னது தற்போது  திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |