Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாட்டின் NO. 1 முதல்வர் ஸ்டாலின்”….. அரசின் சாதனையை தெரிஞ்சுகிட்டு பேசுங்க…. இபிஎஸ்-க்கு திமுக அமைச்சர் பதிலடி….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி, சேலைகள் கண்டிப்பாக வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி வெளியிட்டிருக்கும் அறிக்கை அர்த்தம் அற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கலுக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகளின் தரம், வண்ணங்கள் போன்றவற்றை ஏற்கனவே ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு இலவச வேட்டி, சேலை வழங்குவது  தொடர்பாக ஆய்வுக்கூட்டமும் நடத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான செய்திகளும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வந்துள்ளது. ஆனால் இந்த செய்திகளை எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி பார்த்தாரா என்று தெரியவில்லை.

மனம் போன போக்கில் தேவையில்லாமல் அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் 1 கோடியே 79 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த வருடத்தை போல் பொங்கல் பண்டிகையின் போது கண்டிப்பாக இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும். தமிழகத்தின் நம்பர் ஒன் முதலமைச்சராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் இனியாவது எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வரும் சாதனைகளை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |