கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவில் பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வந்தன. ஆனால் தற்போது பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் கர்நாடகாவில் தமிழ்ப்பள்ளிகளை மூடக்கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும், கர்நாடக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டு மெனவும், புதிய தமிழ்ப் பள்ளிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.