இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பிரென்ட் குடியிருப்பு பகுதி. இந்த பகுதியில் வசித்து வந்த மலேசிய தமிழ் தம்பதி குடும்பத்தினரோடு சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குகராஜ் சிதம்பரநாதன் 42 வயதான இவருக்கு 36 வயது நிரம்பிய பூர்ணா காமேஸ்வரி என்ற மனைவியும், மூன்று வயதான கைலாஷ் குகராஜ் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பூர்ணாவின் உறவினர் ஒருவர் தினமும் தொடர்பில் இருந்த பூர்ணா கடந்த சில நாட்களாக தொடர்பில் இல்லை என்று போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பூர்ணா வீட்டை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் வரவில்லை இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பூர்ணாவின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீடு பூட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து விசாரித்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கே மனைவி – மகன் கொல்லப்பட்டு, கணவர் தற்கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மேலும் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த ஒரு நாயும் கொள்ளப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அக்கம்பக்கத்தினர் கணவன் – மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.