2020ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள்
‘தலைவர் 168’ ரஜினிகாந்த்-கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 திரைப்படம் 2020 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வலிமை’ அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் வலிமை திரைப்படம் 2020 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ விஜய்சேதுபதி-மோகன்ராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் 2020 ஜுன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘தளபதி64’ விஜய்-விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி64 திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘சூரரைப்போற்று’ சூர்யா-அபர்ணா பாலமுரளி நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் சூரரைப்போற்று திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
‘பூமி’ ஜெயம் ரவி-நித்தி அகர்வால் நடிப்பில் லக்ஷ்மண் இயக்கத்தில் உருவாகிவரும் பூமி திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
‘மூக்குத்தி அம்மன்’ நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
‘டேனி’ வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் டேனி திரைப்படம் 2020 மார்ச் மாதம் வெளியாகிறது.
‘கபடதாரி’ சிபிராஜ்-நந்திதா ஸ்வேதா நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் கபடதாரி திரைப்படம் 2020 மார்ச் மாதம் வெளியாகிறது.
‘கடைசி விவசாயி’ – விஜய்சேதுபதி-நல்லாண்டி உள்ளிட்டோர் நடிப்பில் எம்.மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி திரைப்படம் 2020 பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.
‘சைக்கோ’ உதயநிதி ஸ்டாலின்-அதிதிராவ் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியாகிறது.
‘ஜிப்ஸி’ ஜீவா-நடாஷா சிங் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாக இருக்கும் ஜிப்ஸி திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியாகிறது.
‘பட்டாஸ்’ தனுஷ்-மெஹ்ரீன் பிர்ஸதா நடிப்பில் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பட்டாஸ் திரைப்படம் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகிறது.
‘பொன் மாணிக்கவேல்’ பிரபுதேவா-நிவேதா பெத்துராஜ் நடிப்பில் எ.சி.முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 09ஆம் தேதி வெளியாகிறது.
‘தர்பார்’ ரஜினிகாந்த்-நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.