Categories
பல்சுவை

தமிழுக்கென்று ஒரு கண்டமே உள்ளதா…? கடலில் மூழ்கிய தமிழர் வரலாறு… தமிழர் சரித்திரத்தை நினைவு படுத்துவோம்…!!

தமிழ் தமிழால் தமிழர்கள் தமிழர்களால் தமிழ் என பின்னிப்பிணைந்த இந்த உறவின் வயது தெரியுமா நமக்கு. 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு வரலாற்றுச் சரித்திரத்தை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம் கேளுங்கள். உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கும் இடம் நம் மூதாதையர்கள் வாழ்ந்த இடம் என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது இடம் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்த இடம் அதுதான் நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட குமரிக்கண்டம்.

Image result for பழைய குமாரி கண்டம்

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் இங்குள்ள சிறு சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் குமரிக்கண்டம். ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுளக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு 49 நாடுகள் இருந்துள்ளன. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளன.

குமரிக்கொடு மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன. தென்மதுரை கபாடபுரம் முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். ஆனால் நக்கீரர், இறையனார், அகப்பொருள் என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறியுள்ளார் உள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள தென் மதுரையில் கிமு 4440ல் 4440 புலவர்களுடன் 39 மன்னர்களும் இணைந்து பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

Image result for பழைய குமாரி கண்டம்

இன்று  இது அனைத்துமே அழிந்து விட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் கிமு 3700ல் 3700 புலவர்களால் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கிமு 1850ல் 449 புலவர்கள் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் அல்லது தெரியப்படுத்த வேண்டிய பெருமையை தவற விட்டவர்கள் யார். தமிழுக்கென்று ஒரு நாடில்லை என்று புலம்புவதை விட தமிழுக்கென்று ஒரு கண்டமே இருந்ததை நினைத்து பெருமைப்படுவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டுவிட்டு 20000 வருட உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். தாய்மொழி தமிழ் என்று சொல்வதைவிட மொழிகளின் தாய் தமிழ் என்று திமிருடன் சொல்வோம்.

Categories

Tech |