Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருக்கு பிறந்தநாள்…. இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்…. ரசிகர்களின் எதிர்பார்ப்பு….!!

தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இயக்குனர் வெற்றிமாறனுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபல திரையுலக நட்சத்திரங்கள் பலர் இணையத்தில் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய் ஆவார். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழ் திரையுலகிலேயே பெஸ்ட் காம்போ என்றாலே அது விஜய்-வெற்றிமாறன் திரைப்படமாக தான் இருக்கும். அந்த வகையில் வெற்றிமாறன் சமீபத்தில்  கொடுத்த பேட்டியில் கூறியதாவது “நான் தற்போது இயக்கிவரும் திரைப்படங்களை முடித்துவிட்டு தளபதி விஜய்யை வைத்து அடுத்த திரைப்படம் இயக்க உள்ளேன்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இயக்குனர் வெற்றிமாறனுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபல திரையுலக நட்சத்திரங்கள் பலர் இணையத்தில் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். இதனையடுத்து தளபதி விஜய் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தும் தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியும் வருகின்றனர். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் திரைப்படம் ‘Dead Of The Shoes’ என்ற நாவலின் தழுவலாகத்தான் இருக்கும் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |