Categories
மாநில செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது – உயர்நீதிமன்றம் கண்டனம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதனால் வட மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த புகழேந்தி பிரகாஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில் சேவை, பேருந்துகள் தமிழக அரசு வழங்கியுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்காக பயன்படுத்தி விட்டு இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என கூறியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் தமிழகத்தில் பதிவு செய்யப்படாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளனர். ஜுன் 10ம் தேதி இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |