தமிழ் வழியில் பயின்ற கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் நிர்வாகம் மாணவிகளை அலைக்கழிப்பு செய்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு தமிழ் வழியில் படிப்பதற்கான சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த முன்னாள் மாணவிகள் தங்களுக்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்க வேண்டுமென கல்லூரிக்கு விண்ணப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு கல்லூரி நிர்வாகம் சரியான பதில் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்காமல் மாணவிகளை அலைக்கழிப்பு செய்திருக்கின்றனர்.
இதனையடுத்து மாணவிகள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். இதனால் உடனே கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் மாணவிகளுக்கு தமிழ் வழியில் பயின்ற சான்றுகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் அனைத்து மாணவிகளுக்கும் கல்லூரி நிர்வாகம் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இதற்காக மாணவிகள் அனைவரும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.