புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “புயலால் பாதிப்பு வரக் கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் புதுச்சேரியில் செய்யப்பட்டது. நல்ல முன் ஏற்பாடு காரணமாக பல்வேறு பாதிப்புகள் தடுக்கப்பட்டு உள்ளது. புயலால் பல பேர் வீடுகளை இழந்து இருக்கின்றனர். இதற்கிடையில் இழப்பீடு தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் கணக்கு எடுத்து வருகின்றனர். உயிரிழப்பு இன்றி எடுக்கப்படும் நடவடிக்கைதான் சிறப்பான பணி ஆகும்.
மக்களை காக்கவேண்டியது அரசின் கடமையாகும். தமிழகத்தில் மாண்டஸ் புயல் குறித்த நடவடிக்கையில் மற்ற மாநில ஆட்சி பற்றி கருத்து சொல்வது சரி இல்லை. திராவிடமாடல் என்பதற்கு பதில் வேறு பெயரை பயன்படுத்தியிருக்க வேண்டும். மாடல் என்பது தமிழ் பெயரா? அவர்கள் என்ன கூறினாலும் அது தமிழ் வார்த்தையா..? ஆகவே திராவிட மாடலுக்கு பதில் முத்தமிழறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்” என்று பேசினார்.