தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு, அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான பிராவோ கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் சற்று ஆறுதல் தரும் வகையில், சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை மெல்ல குறைந்து காணப்படுகிறது. ஆனால் தற்போது தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு முக கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுமாறு பல்வேறு பிரபலங்களும் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பிரபல வீரருமான பிராவோ டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் “தற்போது தமிழகத்தில் covid -19 தொற்று அதிகரித்து வருவது, கவலையளிக்கிறது , இதனால் தொற்றிலிருந்து விரைவில் மீள்வதற்கு, மாநில அரசு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நடக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என்று அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
Worried about the rising numbers in #covid-19 cases in Tamilnadu .
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் #covid-19 குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீழ மாநில விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.@mkstalin @Udhaystalin pic.twitter.com/wdEky6M1uB
— Dwayne DJ Bravo (@DJBravo47) May 22, 2021