தமிழக முதல்வருடன் இளைய தளபதி எடுத்துக்கொண்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் இளைய தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படமானது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இதனை அடுத்து இயக்குனர் நேசன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் தற்பொழுது இளைய தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.