Categories
மாநில செய்திகள்

மிகப்பெரிய அச்சுறுத்தலா இருக்கு…. நாம் மீண்டு எழுவோம்…. முக.ஸ்டாலின் நம்பிக்கை…..!!

தமிழக முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் கொரோன பற்றி பேசியபோது கொரோனா என்ற பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. இதை வென்று நாம் மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கையை முதலில் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழகம் இப்பொழுது 2 மிக முக்கியமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. ஒன்று கொரோனா என்கின்ற நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று நிதி நெருக்கடி.

இந்த இரண்டையும் சமாளிக்க பல முயற்சிகளை தமிழக அரசு முழுமையாக செய்துகொண்டு வருகின்றது. கொரோனா என்கின்ற பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் தொற்றுக்கு உள்ளானவர்களை காப்பதற்கான பணிகளை கண்ணும் கருத்துமாக தமிழக அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றது.

Categories

Tech |