Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 132 ஜவுளிகடைகளில்….வணிக வரித்துறை அதிரடி சோதனை….!!!!

தமிழகம் முழுவதிலும் 132 ஜவுளி கடைகள் மற்றும் அவை தொடர்புடைய நிறுவனங்களில் நேற்று வணிக வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினார்கள். தமிழக வணிக வரியை பெருக்குவதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன்படி வரி ஏய்ப்பு செய்வதை கண்டறிந்து அரசுக்கு வர வேண்டிய முறையான வரியை வசூல் செய்து வருகின்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி .மூர்த்தி அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதிலும் நேற்று சோதனை நடந்தது.                                                                                                                                                                                                                                                                  ஜவுளி கடைகள் மற்றும் அவை தொடர்பான நிறுவனங்கள் என மொத்தம் 132 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் ஒரு இடத்தில் தலா நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் ஈடுபட்டார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரி சரியாகச் எழுத்தப்பட்டுள்ளதா அல்லது வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் 132 இடங்களில் நேற்று மாலை தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இன்றும் சோதனைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு 96 ஆயிரம் கோடி வணிக வரி மூலம் வருவாய் அரசுக்கு கிடைக்கின்றது.  நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் 36 ஆயிரத்து 260 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து ஒவ்வொரு பிரிவாக சோதனை நடத்துவதற்கு வணிக வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  வணிக வரி முறையாக செலுத்துபவர்களை ஊக்குவிப்பது மற்றும் வரி செலுத்த வேண்டியவர்களை வரி செலுத்த வைப்பதற்காகவும் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |