தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களில் 25% பணியிடங்களை, விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் வைத்து முன்னுரிமை அடிப்படையில் நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குனர் மற்றும் குழும இயக்குநர், அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்கள் ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுக்கு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதி அடிப்படையில் நிர்ணயம் செய்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ள அரசாணைக்கு திருத்தம் வெளியிடும்படி கேட்டுக்கொண்டார். மேலும் அவற்றை பரிசீலனை செய்த அரசு முதன்மை அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு நேரடி நியமனம் 25% பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியிட்டுள்ளது.