கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கொரோனாவுக்கு எதிரான முன் களப்பணியாளர்களுக்கு மு.க ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார். பின்னர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு அவர் மரியாதை செய்தார்.
கலைஞருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் மு.க ஸ்டாலின் உடன் துரைமுருகன், டி.ஆர் பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.