Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் பரவல்…. விமான சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் முதல்வர் வேண்டுகோள்….!!!!

ஒமிக்ரான் வைரஸ் டெல்லியின் பரவ அதிக வாய்ப்பு உள்ளதால், விமான சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு ட்விட்டர் வாயிலாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒமிக்ரான் என பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா மாறுபாடு தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வரும் சூழலில், இந்தியாவிற்கும் இது பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரக்கூடிய விமான சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ட்விட்டர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த பதிவில் டெல்லிக்கு அதிகப்படியான சர்வதேச விமான பயணிகள் வருவதாகவும், கொரோனா முதல் அலையின் போது தாமதம் செய்ததால் தான் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிட்டது என்ற அவர், இந்த முறை தாமதிக்காமல் விமான சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |