சேவல் சண்டை என்பது தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். இது ஜல்லிக்கட்டு போல தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிபி 5-ஆம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றதற்கான சான்றாக சேவல் நடுகல் கிடைத்துள்ளது. பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜனவரி 25-ஆம் தேதிக்கு பிறகு நீதிமன்ற வழிகாட்டுதலுடன் வெற்றுகால் சேவல் சண்டை நடத்த அனுமதி தருமாறு சண்டை சேவல்களை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேவல் சண்டைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படுமா?