Categories
மாநில செய்திகள்

அவருமில்லை, இவருமில்லை அடிச்சுக்காதீங்க!… தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் இவர்தான்!…. பா.ஜ.க அண்ணாமலை அதிரடி ஸ்பீச்…..!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்து உள்ளது. இவ்விவகாரத்தில் பா.ஜ.க தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும். தி.மு.க அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் தினசரி விலைவாசி அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது. தற்போதெல்லாம் பா.ஜ.க-வை பற்றி பேசிதான் திமுக வண்டி ஓடுகிறது. ஆரிய-திராவிடம் எனும் பிரிவினையை ஏற்காதவன் நான். இதனிடையில் ஆ.ராசா இன்னுமே 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் தான். தமிழ்நாட்டில் நம்பர் 1 நடிகர் அஜித்தும்  கிடையாது, விஜய்யும் இல்லை. இந்நிலையில் தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தான்” என்று அவர் பேசினார்.

Categories

Tech |