Categories
தேசிய செய்திகள்

மக்களே…. பிரதமர் மோடி கொடுக்கும் சூப்பர் பொங்கல் பரிசு…. என்ன தெரியுமா?….!!!!

ஜனவரி 12-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. ஆகவே இதில் பங்கேற்று கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ஆம் தேதி விமானம் மூலமாக சென்னை வர இருக்கிறார். அப்போது விருதுநகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்த பின் பிரதமர் மோடி முதன்முறையாக தமிழ்நாடு வருகிறார். அதுமட்டுமின்றி பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் முதன்முறையாக ஒரே மேடையில் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் பின்னணி தொடர்பாக விசாரணை செய்தபோது முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது 11 மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொண்டது. இவை திறக்கப்பட்டால் சுமார் 1450 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிகிறது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்ச்சியாக இருக்கிறது.

இந்நிலையில் ஸ்டாலின் மற்றும் மோடி பங்கேற்கும் நிகழ்வில் நீட் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களும் விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. ஒரு ஆண்டுக்கும் மேலாக டெல்லியில் போராடி வந்த விவசாயிகளுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அந்த போராட்ட களத்திலேயே பல பேர் உயிரை விட்டனர். எதிர்ப்பு அதிகரித்து வந்தாலும் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒன்றிய அரசு அந்த சட்டத்தை ரத்து செய்தது. அதுமட்டுமின்றி 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகளே இருக்கின்ற நிலையில் பாஜகவுக்கு எதிராக அணி திரண்டு விடக்கூடாது என்பதிலும் பாஜக கவனமாக இருக்கிறது.

இந்த நிலையில் சிலவற்றை விட்டு பிடிக்கலாம், மக்களவைத் தேர்தலுக்குப் பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் பாஜக தலைமை இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன் ஒரு பகுதியாக நீட் தேர்வில் பாஜக அரசு சில தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டாலும் தமிழகத்திற்கு விலக்கு என்ற அளவில் அல்லது மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்ற அளவில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு செய்தால் அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையான பொங்கல் பரிசாக அமையும். மோடி அப்படியான அறிவிப்பை வெளியிடுவாரா அல்லது வழக்கம்போல் ஏதேனும் திருக்குறளை சொல்லி விட்டு விமானத்தில் பறந்து விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |